Thursday, April 14, 2011

தமிழில் என் முதல் பதிவு

நான் பலரிடம் கேட்க நினைக்கும் கேள்வி இது - நீங்கள் எந்த மொழியில் சிந்திக்கிறீர்கள் ? ஒவ்வொருவரும் தங்கள் தாய் மொழியில் தான் 90 சதவீதம் சிந்திக்கிறார்கள் என்று ஒரு கருத்து உண்டு . ஆனால் நான் பாதி நேரம் என்னுடைய தாய் மொழியில்லாத ஆங்கிலத்தில் தான் சிந்திப்பேன் . ஏன் அப்படி என்ற கேள்விக்கு என்னிடம் பதில் கிடையாது . மீதி பாதி நேரம் என் தாய் மொழியிலும் சிந்திக்கிறேன். என்னைப் பொருத்த வரைக்கும் அது போதும் . எந்த மொழியில் சிந்தித்தால் என்ன ? சிந்தனை நன்றாக இருக்கும் வரை . என்னுடைய தமிழ் உச்சரிப்பைக் கேட்டு எத்தனையோ பேர் என்னை கிண்டல் செய்ததுண்டு ; ஏன், நான் தமிழில் தான் பேசுகிறேனா என்று கூட கேட்டதுண்டு . அப்படி கேலி செய்த சிலர் நான் ஆங்கிலதில் நன்றாக பேசுகிறேன் என்று சொல்லுவது உண்டு . எது எப்படி ஆக இருந்தாலும் சரி - நான் தமிழில் எழுத காரணம் , என்னால் எந்த மொழியிலும் என்னுடைய கருத்துக்களை சொல்ல முடியும் என்பதை எனக்கு நானே சொல்லிகொள்வதற்கு தான் . தமிழில் நான் எழுதும் போது தான் தெரிகிறது , இந்த மொழியில் நான் எவ்வளவு பின்தங்கி இருக்கிறேன் என்பது . என் தாய் மொழியில் நான் எழுத ஆங்கில எழுத்தக்களைப் பயன் படுத்த வேண்டி இருக்கிறது . அதற்கு அப்புறம் , ஏதோ ஒரு மொழி மாற்று கருவியின் துணைக் கொண்டு தமிழ் வடிவத்திற்குக் கொண்டு வருகிறேன் . இதில் எத்தனை எழுத்துப் பிழை , எத்தனை சொற் பிழை !! என்னுடைய இந்த புதிய முயற்சியைப் படிக்கும் அனைவருக்கும் எனது சிறு வேண்டுகோள் - என் பிழைகளை மன்னித்து , அதைத் திருத்தி கொள்ள எனக்கு கண்டிப்பாக உதவ வேண்டும் என்பது தான் .

சரி இன்று நான் எழுத போவது என்ன ? நான் படித்த தமிழ் புத்தகங்களைப் பற்றி . கடந்த 1 வாரத்தில் நான் 2 தமிழ் புதினங்களைப் படித்து முடித்து விட்டேன். தமிழில் வாசிப்பது இது முதல் முறை அல்ல! ஏற்கனவே ஒரு முறை வீட்டில் பொழுது போகாமல் இருந்த பொது அம்மாவின் புத்தகங்களில் இருந்து - யாரும் யாருடனும் இல்லை என்ற அற்புதமான படைப்பை ரசித்திருக்கிறேன் . நடந்து முடிந்த புத்தக கண் காட்சியில் புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் சுஜாதாவின் புத்தகங்கள் சிலவற்றை வாங்கினேன் . இங்கு துபாய் வரை அதை சுமந்து வந்திருப்பது வீணாகவே இல்லை. அதில் ஒன்று - பெண் இயந்திரம் , மற்றொன்று - நில்லுங்கள் ராஜாவே . அவரது எழுத்தை பற்றியோ , இல்லது அவரது புலமை பற்றியோ பேச எனக்கு வயதும் கிடையாது அனுபவமும் பத்து . நான் ரசித்ததை மட்டும் இங்கே பதிவிட விரும்பிகிறேன்.

பெண் இயந்திரம் :
இந்த புத்தகம் வெளி வந்து ஏறக்குறைய 25 வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறன் . ஆனால் அன்றைக்கு நடந்த அதே சம்பவங்கள் இன்றும் பல பெண்களின் வாழ்கையில் நடக்கிறது என்று நினைக்கும் பொது என்னால் இந்த உலகத்தில் மாற்றம் என்பது நடக்கிறது என்று நம்ப முடியவில்லை. எத்தனை நாள் தான் இந்த பெண்ணின் வாழ்கை போராட்டத்தை பற்றி எழுத்தாளர்கள் எழுதினாலும் , அவள் படும் பாட்டை சொல்ல இந்த நூற்றாண்டு மட்டும் அல்ல ஆயிரம் நூற்றாண்டும் போதாது என்பது தான் நிஜம் . இயந்திரமாக மாற்றப்படும் பெண் தன்னுடைய வாழ்கையை தானே செதுகவது , அதில் அவள் நேரிடும் தடன்கங்கள் எல்லாத்தையும் சுஜாதா அவர்கள் உணர்வு பூர்வமாக நமக்கு தந்திருக்கிறார் . கடையின் இறுதி வரிகளை படிக்கும் பொது , என் கண்களில் கண்ணீர் வர விலை என்றாலும் , என் மனதால் நான் அழுதேன் . ஒரு நாள் முழுதும் மனம் மிகவும் அலை பாய்ந்தது . சோகத்தில் அம்மாவிடம் புலம்பினேன் , பிறகு எப்போதும் போல இதுவும் கடந்து போகும் என்று மனதை தேதி கொண்டு அடுத்த புத்தகத்தை எடுத்தேன் .

நில்லுங்கள் ராஜாவே :
இந்த புத்தகத்தை படிக்க எனக்கு ஏறக்குறைய 3 நாட்கள் ஆனது -- நேரங்களில் சொல்ல வேண்டும் ஆனால் 3 மணி நேரம் . தமிழில் நான் படிக்கும் மூன்றாவது புத்தகம் இது . இந்த வேகத்தில் படித்தேன் என்றான் , சுஜாதாவின் எழுத்து எனக்கு மிகவும் பழக்கப்பட்ட எழுத்து என்று தான் சொல்ல வேண்டும் . இன்று ஆங்கில கதைகளை படிக்கும் போது கூட நான் அகராதியை பயன் படுத்துவது இல்லை . ஆனால் சுஜாதா பயன் படுத்தும் ஓரிரு ஆங்கில வார்த்தைகளை நான் புரிந்து கொள்ள அகராதியை தேடுகிறேன் . ஒரு மனோதத்துவ கதை இது - ஒரு மனிதனை யாராலும் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை . தன்னை தான் என்று அவன் நிரூபிக்க அவனிடம் ஒரு ஆதாரமும் இல்லை . அதை தேடி அலைகிறான் . அவன் சொல்வது பொய் என்பதற்கு ஆதாரம் இல்லை . அவன் நிஜம் சொல்கிறான் என்றால் அதை நம்ப யாரும் இல்லை . அவனை பைத்தியம் இல்லை என்று மருத்துவர் சான்றிதழ் கொடுத்து விடுகிறார் . ஆனால் அவருக்கு ஏன் இவன் இப்படி நடந்து கொள்கிறான் என்று ஒரு சந்தேகம் எழுகிறது . சுஜாதாவின் புகழ் - கணேஷ் வசந்த் இருவரையும் மருத்துவர் கூப்பிட்டு விடுகிறார். இந்த முடிச்சை அவிழ்க்க முயலும் போது , திடுக்கிடும் ஒரு தகவல் தெரிகிறது . கடைசியில் அவன் தனது அடையாளத்தை பெற்றானா ? மற்றும் எழும் பல கேள்விகளுக்கு எளிதில் புரியும் வாறு , மிகவும் யதார்தக்மாக பதில் சொல்லிருக்கிறார் சுஜாதா. படித்து முடிக்கும் பொது மனதில் ஒரு திருப்தி . ஆனால் நேரம் தான் மிகவும் ஆகி விட்டது . தூங்க வேண்டும் . காலையில் அலுவலகத்திற்கும் செல்ல வேண்டும் . அதனால நேற்று இரவு கதையை மீண்டும் மனதில் ஓட்டி பார்க்க முடியவில்லை . என்றும் என் நினைவில் இருக்க இன்று எழுதி விட்டேன் என்னுடைய இந்த வலைபக்கத்தில்.
இத மாதிரி நிறைய படிக்க வேண்டும் . நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற இச்சையுடன் எனது முதல் தமிழ் முயற்சியை இத்துடன் நிறுத்தி கொள்கிறேன் . எப்படி இருக்கிறது என்று படிப்பவர்கள் தான் சொல்ல வேண்டும்.

1 comment:

  1. evvalavu pizhai irundhalum enakku purindhadhu un karuththukkal.......adhu dhan thaai mozhi:-)

    ReplyDelete